Wednesday, March 17, 2010

Homage to Souls

தர்ப்பணம் நம் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு  நன்றி கூறியும் , அமைதி வேண்டியும் செய்யும் நிகழ்வு

தர்ப்பை எனும் புல்லினால் செய்யும் அர்ப்பணம்

இங்கு முன்னோர்கள் என்பவர்கள் நமக்கு முன் சென்றவர்கள் இவர்களில் நம் பெற்றோர் , உற்றோர் ,உறவினர் , நண்பர்,வீட்டு மற்றும் வளர்ப்பு பிராணிகளையும் குறிக்கும்

நம்மிடையே மற்றும் நமக்காக வாழ்ந்தவர்களுக்கு நன்றி கூறும் மற்றும் அவர்களின் ஆன்மா அமைதி பெறவும் வணங்கும் உன்னதமான நிகழ்வே தர்ப்பணம்

அம்மாவாசை மற்றும் சில முக்கியமான நாட்களில் தர்ப்பணம் செய்வதன்  காரணம்
அந்நாட்களில் நமது எண்ண அலைகள் ஒருங்கிணைந்து மேல் நோக்கி எழும்

அத்தகைய எண்ணங்கள் வலிமையானவை அவற்றின் பிரார்த்தனை பலன் மிகுந்தது

அதுபோன்று சில சூட்சும மற்றும் அதிர்வுள்ள இடங்களில் நமது எண்ண அலைகள் எப்பொழுதும் ஒருங்கிணைந்து மேல்நோக்கி எழும் அத்தகைய சிறப்பான இடங்களில் நாம்  தர்ப்பணம் என்றும் செய்யலாம் .

நம்முடன் வாழ்தவர்களுக்கும் , நமக்காக வாழவர்களுக்கும் நன்றி கூறுதலும் , அவர்தம் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதும் நமது கடமையாகும்

இதனை முழு மனுதுடன் செய்யும்பொழுது ஆன்மாக்களின் ஆசியும் , அருளும்  கிடைப்பது உறுதி

மேலும் தற்பொழுது நம்மிடையே வாழ்பவர்களுக்கு நன்றிகூறவும்   , மதிக்கவும் கற்றுக்கொள்வோம் அன்பும் , மகிழ்வும் நம்மை சூழும்
வாழ்க்கையும் அமைதியுடனும் அர்த்தத்துடனும் விளங்கும்








தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
                        
                   அய்யன் வள்ளுவப்பெருந்தகை

வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூறல் , வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல் ,விருந்தோம்பல் , சுற்றம் பேணல் இக்கடமைகளை நிறைவேற்றத்  தன்னை  நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை நெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்

The manes, God, guests kindred, self,  in due degree ,
These five to cherish well is the chiefest charity

  The chief (duty of the house holder)  is to preserve five-fold rule (of conduct) towards
 the manes, the Gods, his guests, his relations and himself
                            
                                    Rev.Dr. G. U.Pope

No comments:

Post a Comment